Monday, October 1, 2012

இலங்கை தமிழர்களுக்கான இந்திய அரசின் வீடமைப்புத் திட்டம் நாளை ஆரம்பம்!

Monday, October 01, 2012
இலங்கை::இலங்கை தமிழ் மக்களுக்கான வீடமைப்புத் திட்மொன்றை ஆரம்பிக்க இந்திய மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாகவே புதிய வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் அங்குரார்பண நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது  இந்த வீடமைப்புத் திட்டம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் நலன்கருதி இந்த வீடமைப்புத் திட்டங்கள் முன்னடெக்கப்படுகின்றன.

இதேவேளை இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கருதி மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நான்காயிரம் வீடுகளை நிர்மாணிக்கவும் இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment