Tuesday, October 2, 2012

உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையீடு செய்வதனை எற்றுக்கொள்ள முடியாது - இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது!

Tuesday, October 02, 2012
இலங்கை::உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையீடு செய்வதனை எற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட முறையிலும், பலவந்தமான முறையிலும் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு முரணானது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 67ம் அமர்வுகளில் அமைச்சர் பீரிஸ் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடுகளின் இறைமை, சுயாதீனத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் சர்வதேச சமூகம் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.

அணிசேரா நாடுகள் அமைப்பின் ஸ்தாபக உறுப்பு நாடுகளில் ஒன்று என்ற வகையில் இலங்கை எப்போதும் நாடுகளின் இறமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

நீண்ட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், வேறும் தரப்பினரை விடவும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற காரிசனை இலங்கை அரசாங்கத்திற்கு மிக அதிகமாகக் காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், புறச்சக்திகளின் தேவையற்ற அழுத்தம் நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு வலு சேர்க்காது எனவும், சமாதான முயற்சிகளுக்கு தடையாகவே அமையும் எனவும் அமைச்சர் பீரிஸ் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் நாட்டில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment