Tuesday, October 2, 2012

வெளிநாட்டுக்கு செல்ல (லண்டன் புலிகளை சந்திக்க) அனுமதிகேட்டு பொடா கோர்ட்டில் (புலி)வைகோ மனு: கியூபிராஞ்ச் போலீசுக்கு நோட்டீசு!

Tuesday, October 02, 2012
சென்னை::வெளிநாட்டுக்கு செல்ல (லண்டன் புலிகளை சந்திக்க) அனுமதிகேட்டு பொடா கோர்ட்டில் (புலி)வைகோ மனு: கியூபிராஞ்ச் போலீசுக்கு நோட்டீசு!

சென்னை::மதுரை திருமங்கலத்தில் 2002-ம் ஆண்டு நடந்த ம.தி.மு.க. மாநாட்டில், புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ உள்பட பலர் மீது கியூ பிராஞ்ச் போலீசார் பொடா வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் வைகோ 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில், சென்னை பொடா கோர்ட்டு 2004-ம் ஆண்டு வைகோவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. கோர்ட்டு விதித்த நிபந்தனையின்படி, வைகோ வெளிநாடு செல்லவேண்டுமென்றால், பொடா கோர்ட்டில் அனுமதி பெறவேண்டும்.

இந்த நிலையில், பூந்தமல்லி பொடா கோர்ட்டில் வைகோ ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இங்கிலாந்து மக்களவை உறுப்பினர் வீரேந்திர சர்மா, ஒரு (புலி உறுப்பினர்கள்) நிகழ்ச்சியில் கலந்துகொள்ள லண்டனுக்கு வரும்படி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக என் மனைவியுடன் அக்டோபர் 10-ந் தேதி லண்டனுக்கு செல்கிறேன். 28-ந் தேதி நாடு திரும்பி விடுவேன்.

2004-ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை 6 முறை வெளிநாடு சென்றுள்ளேன். அதற்கு இந்த கோர்ட்டும் அனுமதி வழங்கியுள்ளது. எனவே வெளிநாடு செல்வதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும். நாடு திருப்பியவுடன், அந்த தகவலை இந்த கோர்ட்டுக்கு தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

பூந்தமல்லி பொடா கோர்ட்டு நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. எனவே, இந்த கோர்ட்டின் நீதிபதியாக, சென்னை மாவட்ட 6-வது செசன்சு கோர்ட்டு நீதிபதி கலியமூர்த்தி கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.

இந்த மனு நீதிபதி கலியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, கியூ பிராஞ்ச் போலீசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மனு மீதான விசாரணையை 4-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

No comments:

Post a Comment