Tuesday, October 2, 2012

மரண தண்டனையை நீக்க கோரிக்கை!

Tuesday, October 02, 2012
இலங்கை::நாட்டில் மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மானித உரிமைகள் அணையகத்தின் சட்டத்தரணி பிரதிபா மஹானாம ஹேவா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

எமது செய்தி சேவையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் 1966 ஆண்டு இயற்றப்பட்ட பொது மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்திற்கு அமைவாக இலங்கையில் மரண தண்டனையை நீக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாறு மரண தண்டனையை நீக்குவதன் மூலம் இலங்கையின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் பிரதிபா மஹானாம ஹேவா சுட்க்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment