Thursday, October 04, 2012
இலங்கை::பாகிஸ்தான் உளவுப் பிரிவினரின் நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் முக்கிய உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் செயற்பட்டு வருவதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தமாங இந்திய வெளிவிவகார அமைச்சு க்யூ காவல்துறையினருக்கு அறிவித்துள்ளது. தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உளவுப் பிரிவினர் செயற்பட்டு வருகின்றனரா என்பது குறித்து ஆராய்ந்து அது தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவு இலங்கைத் தமிழ் (புலி) ஆதரவு புகலிடக் கோரிக்கையாளர்களை பணிக்கு அமர்த்தி வருவதாக அண்மையில் இந்திய றோ உளவுப் பிரிவு தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment