Thursday, October 4, 2012

மட்டு மாவட்ட வாக்குகள் சட்ட ரீதியாக எண்ணப்படவில்லை; மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்!

Thursday, October 04, 2012
இலங்கை::கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாக்குகள் சட்டரீதியாக எண்ணப்படவில்லை எனத் தெரிவித்து அந்த மாவட்டத்தின் தேர்தல் முடிவை இரத்து செய்யுமாறு கோரி ஈழவர் ஜனநாயக முன்னணி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளது.


ஈழவர் ஜனநாயக முன்னணி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட நான்கு வேடட்பாளர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் பிரசாரம் இடம்பெற்ற காலபகுதியில் தங்களின் முன்னணிக்கு பல்வேறு அழுத்தங்கள் விடுக்கப்பட்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வாகரையில் தமது தேர்தல் அலுவலகம் தீ வைக்கப்பட்டதாகவும் வாக்குகள் எண்ணப்பட்ட தினத்தில் அவர்களின் முகவர்கள் அந்த நிலையங்களுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்குகள் எண்ணப்பட்ட சந்தர்ப்பத்தில் வேட்பாளர்கள் சார்பாக அவர்களின் முகவர்கள் அங்கு இருக்க முடியும் என தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள போதிலும் தமது முன்னணியின் முகவர்களுக்கு வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செல்வதற்கு இடமளிக்கப்படவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் முகவர்களுக்கு வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment