Thursday, October 4, 2012

புதிய அரசியலமைப்பு சீர்த்திருத்தம்!

Thursday, October 04, 2012
இலங்கை::சட்டம் மற்றும் அரச நிறுவனங்;கள் சுயாதீனமாக மாற்றப்பட வேண்டுமாயின் அதற்கு ஏற்ற வகையில் புதிய அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்


என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் உறுப்பினர் பிரதீபா மஹாநாமஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அரசியலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும், அரச நிறுவனங்கள் அரசியலில் இருந்து தூர கொண்டு செல்லப்பட வேண்டும்.

அவை சுயாதீனமாக்கப்பட வேண்டும்.

இவற்றிற்கு நிரந்த தீர்வு வேண்டுமாயின் புதிய அரசியலமைப்பு சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

இதுதவிர. இலங்கையில் உள்ள உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான சீர்த்திருத்தமும் முன்வைக்கப்பட வேண்டும் மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் பிரதீபா மஹாநாம hநாமஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment