Wednesday, October 03, 2012
ஸ்ரீநகர்::காஷ்மீரில்,பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள், ஐந்து பேர் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம், கேந்தர்பால் மாவட்டத்தின், வாங்கட் வனப் பகுதியில், பயங்கரவாதிகள் சிலர் இருப்பதாக, தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை, போலீசாரும், துணை ராணுவப் படையினரும் சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நடந்தது. இந்தச் சண்டையில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் வசமிருந்த, ஏராளமான ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. இதேபோல், காஷ்மீரின்,சோபியான் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே, சண்டை நடந்தது. இந்தச் சண்டையில்

No comments:
Post a Comment