Wednesday, October 3, 2012

வரவு செலவுத் திட்டத்தில் 10 ஆயிரம் ரூபா – ரணில்!

Wednesday, October 03, 2012
இலங்கை::எதிர்வரும் நொவம்பர் 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள 2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட பிரேரணையில் அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு வழங்கப்படுமாயின் தாம் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொழில் சங்க தலைவர்களுடன், கொழு;பில்  இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்தார்.

அரச ஊழயர்கள் மிகவும் கடினமான முறையிலேயே தமது வாழ்வை முன்னெடுக்கின்றனர். தனியார் துறையினரும் அதே போன்ற நெருக்கடியையே எதிர்கொள்கின்றனர். மலையக மக்களை எடுத்துக் கொண்டால் அவர்களது இன்னல்கள் குறித்து சொல்ல வேண்டியதில்லை. அரசாங்கம் இதனை உதாசீனம் செய்து, அவர்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றுகின்றனர். இவர்கள் கடன்பட்டே தமது வாழ்வை நகர்த்த வேண்டியுள்ளது. அரசாங்கத்திடம் இதுபற்றி கேட்கும்போது, இப்போது அதற்கான அவசியம் இல்லை. பொருட்கள் விலையேற்றம் குறித்து பிரச்சனையில்லை என்ற கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது வரவு செலவுத் திட்டம் வரவுள்ளது. இப்போது தன்னும் உரிய நிவாரணங்களை வழங்குகின்றனரா என்பதை பார்ப்போம். அப்படி அரசாங்கம் வழங்கினால், அவர்களுக்கு தெய்வ ஆசி வேண்டி பூசைகளை நடத்தவும் தயாராகவுள்ளோம். அதில் அவர்கள் தவறுவார்களானால், மக்களை ஒன்று சேர்த்து மீண்டும் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்துவோம்.

No comments:

Post a Comment