Wednesday, October 03, 2012
இலங்கை::இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சியளிக்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.
நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்தபோதே அமைச்சர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவைவிட பரந்த தன்மையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இந்தியாவை நோக்குவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் இலங்கையர்கள் சிலருக்கு ஏற்பட்ட இடையூறு பதற்றத்திற்குரிய செயலாகும் எனவும் இந்தியா அல்லது அந்த நாட்டு மக்கள் குறித்து இலங்கையர்கள் வெறுப்பைக் காட்டவில்லை என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.
தமிழகத்தில் தோன்றியுள்ள எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை பாதுகாப்புத் தரப்பினருக்கான பயிற்சிகளுக்காக சீனா அல்லது வேறொரு நாடு குறித்து கவனம் செலுத்துமா என்பது தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்கள் இதன்போது அமைச்சரிடம் வினவியுள்ளனர்.
பல்வேறு மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியாவில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்தார்...

No comments:
Post a Comment