Wednesday, October 03, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை தொடர்பாக கேள்விகளை கேட்க இன்னர் சிட்டி பிரஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளர் மெத்தியூ ரசல்ஸ்லீ விடுத்த கோரிக்கையை ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நிராகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் புலிகளின் ஆதரவு நிறுவனம் எனவும் திவயின தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் பான்-கீ-மூன் நியூயோர்க்கில், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், மிக விரைவாக அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை கண்டறிய இன்னர் சிட்டி பிரஸ் முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது என திவயின குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment