Wednesday, October 3, 2012

சட்டவிரோதமான முறையில் 54 ஆயிரம் அமெரிக்க டொலர் பணத்தை இலங்கையிலிருந்து எடுத்துச் செல்ல முயன்ற 4 பேர் வானூர்தி தள சுங்க அதிகாரிகளால் கைது!

Wednesday, October 03, 2012
இலங்கை::சட்டவிரோதமான முறையில் 54 ஆயிரம் அமெரிக்க டொலர் பணத்தை இலங்கையிலிருந்து எடுத்துச் செல்ல முயன்ற 4 பேர் வானூர்தி தள சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை கட்டார் வானூர்தி சேவைக்கு உரித்தான வானூர்தியில் மொசாம்பிக் நோக்கி செல்ல முற்பட்ட போதே அவர்கள் பிடிபட்டுள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முனைந்த அமெரிக்கா டொலர்களின் இலங்கை பெறுமதி 71 லட்சமாகும்.
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவர்கள் பேருவலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, ஆபாசமான காணொளிகள் அடங்கிய இறுவட்டுக்கள் மற்றும் கையடக்க தொலைபேசியை தம்வசம் வைத்திருந்த 18 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் கெப்பற்றிகொல்லாவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசியில் குறித்த மாணவன் தனது காதலியுடன் இருக்கும் ஆபாசமான காணொளிகளும் இருந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment