Wednesday, October 03, 2012
சென்னை::அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தென்சென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி.செந்தமிழன் எம்.எல்.ஏ. வும், விருகம்பாக்கம் பகுதி கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் விருகை வி.என்.ரவியும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் விருகை வி.என்.ரவி (விருகம்பாக்கம் பகுதி) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். வடசென்னை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.வெற்றிவேல் எம். எல்.ஏ.வும், வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜி.வெங்கடேஷ் பாபுவும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வடசென்னை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் டி.ஜி.வெங்க டேஷ்பாபு (புரசைவாக்கம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.வி.சண்முகமும், விழுப்புரம் வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் ஆர்.லட்சுமணனும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் டாக்டர் ஆர். லட்சுமணன் (விழுப்புரம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா அதில் கூறி உள்ளார்.

No comments:
Post a Comment