Wednesday, October 3, 2012

யுத்தத்தின் பின்னர் நாடு அடைந்துள்ள அபிவிருத்தியை சிலர் குறைத்து மதிப்பீடு செய்துள்ளதாக ஐ.நாவின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆசியசிங்க தெரிவித்துள்ளார்!

Wednesday, October 03, 2012
யுத்தத்தின் பின்னர் நாடு அடைந்துள்ள அபிவிருத்தியை சிலர் குறைத்து மதிப்பீடு செய்துள்ளதாக ஐ.நாவின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆசியசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் 63ம் நிறைவேற்றுக் குழு அமர்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினர் இலக்குகளை மாற்றி மாற்றி அறிவிப்பதாகவும் இதனால் இலங்கைக்கு மட்டுமன்றி உறுப்பு நாடுகளுக்கும் அசௌகரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக நீடித்த யுத்தத்தின் பின்னர் நாடு அடைந்து வரும் அபிவிருத்திகளை அங்கீகரிக்காது, குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளில் மனிதாபிமான நெருக்கடிகள் இடம்பெற்று வருவதாகவும், இவ்வாறான நாடுகளுக்கு இலங்கை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு, உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல் போன்ற பல்வேறு காரணிகளில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான மீள் குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற துறைகளில் இலங்கை பெற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளத் தயார் என ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment