Thursday, October 04, 2012
இலங்கை::இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 800 பேர் வருடாந்தம் இந்தியாவில் உள்ள பயற்சி கல்லூரிகளில் பயிற்சி பெற்று வருவதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு காரணமாக இலங்கை இரihணுவத்தினருக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் பயிற்சிகளில் எந்த குறைவும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அனுராதபுரத்தில் அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இராணுவத் தளபதி இதனை கூறியுள்ளார். இதனடிப்படையில், இந்திய - இலஙகை இருதரப்பு இராணுவ பயிற்சிகளுக்காக இராணுவத்தின் விசேட படைப்பிரிவு மற்றும் கொமாண்டோ படைப்பிரிவின் 45 உறுப்பினர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு செல்ல உள்ளனர்.
இந்திய மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள இந்திய இராணுவத்துடன் மாத்திரமே இராணுவ ஒப்பந்தங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் எந்த பிரதேசத்தில் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது என்பது அவர்கள் தீர்மானிக்க வேண்டிய விடயம். இலங்கை- இந்திய இராணுவ பயிற்சிகள் தொடர்பாக தமிழ் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது. அதேவேளை இந்திய இராணுவ அதிகாரிகள் இலங்கையில் வருடாந்தம் பயிற்சிகளுடன் சம்பந்தப்பட்டு வருவதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment