Thursday, October 04, 2012
இலங்கை::புலிகள் மீள ஒருங்கிணைவதற்கு இந்திய அரசாங்கம் இடமளிக்காது என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ புலிகள் மீள இயங்குவதனை இந்தியா அனுமதிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் நடவடிக்கைகளினால் இந்தியாவும் பாதிக்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர் மக்களுக்கு இந்தியா வழங்கி வரும் உதவிகள் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment