Thursday, October 4, 2012

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி மீட்பு!

Thursday, October 04, 2012
இலங்கை::இரண்டு வருடங்களுக்கு முன்னர் பதுரலிய பகுதியில் கடத்திச் செல்லப்பட்டிருந்த எட்டு வயதான சிறுமி ஒருவர் குருவிட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக இந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது பத்து வயதான சிறுமி குருவிட்ட பகுதியிலுள்ள தோட்டக் குடியிருப்பொன்றில் இருந்தபோது மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி முதல் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு இலக்கானதாக பதுரலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியை கடத்திய நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment