Sunday, October 28, 2012

25 ஆண்டாக போலீசாருக்கு "டிமிக்கி'கொடுத்து வந்த இலங்கை நபர் கைது!

Sunday, 28 October 2012
ராமேஸ்வரம்:இந்தியாவில் 25 ஆண்டுகளாக போலீசாருக்கு "டிமிக்கி' கொடுத்து விட்டு, மீண்டும் இலங்கை செல்ல முயன்ற முதியவரையும், அவரிடம் பணம் பறித்த ஆட்டோ டிரைவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இலங்கை வடமராச்சி மாவட்டம், துன்னாளை பகுதியை சேர்ந்தவர் மோசஸ் மகேந்திரன், 68. இவர் சுற்றுலா விசாவில், 1987ல் சென்னை வந்தார். விசா முடிந்து நாடு திரும்பாமல், போலீசாருக்கு "டிமிக்கி' கொடுத்து விட்டு, 21 ஆண்டுகளாக ஐதராபாத், பெங்களூரு, புவனேஸ்வர், டில்லி, ஜம்மு, மும்பை நகரங்களில் வேலை பார்த்து வந்தார். இவரை சென்னை போலீசார் தேடி வந்தனர்.

கடந்த 4 ஆண்டுகளாக புட்டபர்த்தியில் வேலை பார்த்து வந்த இவர், மீண்டும் கள்ளத்தோணி மூலம் இலங்கை செல்ல திட்டமிட்டு, நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்தார். இவரிடமிருந்து, ஸ்ரீராம்நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சுரேஷ், 24, காத்தலிங்கம், 26, மற்றும் ரயில்வே பீடர் ரோடு சீனி, ஆகியோர் 13 ஆயிரம் ரூபாய், இலங்கை பணம் 7 ஆயிரத்தை பறித்து சென்றனர். மோசஸ் போலீசில் தெரிவித்தார். ஆட்டோ டிரைவர்கள் சுரேஷ், காத்தலிங்கம், மோசசை போலீசார் கைது செய்தனர்...

No comments:

Post a Comment