Saturday, October 27, 2012
இலங்கை::13வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டும் முகமாக தேசிய சுதந்திர முன்னணி, ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த தகவலை, தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான செயலாளர் பிரியஞ்சித் வித்தாரண எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி. உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அழைப்பிதழ் தொடர்பாக எமது செய்திப் பிரிவு ஜே.வி.பி. யினை தொடர்பு கொண்டு வினவியது.
அதற்கு பதிலளித்த ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, அவர்களின் அழைப்பிதழை தாம் நிராகரிப்பதாக குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment