Saturday, October 27, 2012
இலங்கை::சுயநிர்ணய ஆட்சியை ஏற்றுக்கொள்வது, தமிழ் மக்கள் ஈழத் தமிழர்கள் என ஏற்றுக்கொள்வது, போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை இணங்குவது ஆகிய விடயங்களை நிறைவேற்றுமாறு புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நோர்வேயில் உள்ள தமிழீழ குழுவின் சார்பில் பஞ்சகுலசிங்கம் கந்தையா இந்த கோரிக்கை விடுத்திருந்தார்.
அரசாங்கம், புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக கடந்த 19 ஆம் திகதி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
எனினும் தமது இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், சர்வதேச தலையீட்டுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தாம் தயாராக இருப்பதாக புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment