Wednesday, September 5, 2012

திருச்சியில் புலி ஆதரவு கோமாளிகளிகள் இலங்கை பக்தர்கள் சென்ற வாகனங்கள் மீது கல்வீச்சு! ! x news!

Wednesday,September,05,2012
திருச்சி::புலி ஆதரவு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் வேளாங்கண்ணியிலிருந்து மீண்டும் இலங்கை செல்வதற்காக 7 வேனில் திரும்பிய இலங்கை பக்தர்கள் மீது திருச்சி அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 வேன்கள் சேதமடைந்தன. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியிலுள்ள புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை புத்தாளம் பகுதியை சேர்ந்த 62 ஆண்கள், 86 பெண்கள், 36 குழந்தைகள் என 184 பேர் கடந்த 2ம் தேதி மாலை 5.30 மணிக்கு விமானத்தில் திருச்சி வந்தனர். அங்கிருந்து தஞ்சை அருகே உள்ள பூண்டி மாதா கோயிலுக்கு சென்றனர். மறுநாள் மாதாவை பிரார்த்தனை செய்தனர். இலங்கை பக்தர்கள் வருகை குறித்து அறிந்த மதிமுக, நாம்தமிழர் கட்சியினர் அங்கு திரண்டனர். அவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து இலங்கை பக்தர்கள், இரவு தங்கிவிட்டு மறுநாள் இலங்கை சென்று விடுவதாக தெரிவித்தனர்.அன்று இரவும் பூண்டியில் தங்கினர். 15ம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க இருந்த அவர்கள், பயணத்தை பாதியில் முடித்து நாடு திரும்ப முடிவு செய்தனர். பின்னர் நேற்று காலை, இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். வேளாங்கண்ணி சென்று மாதாவை வழிபட்ட பிறகு நாடு திரும்பலாம் என முடிவு செய்த னர். அனைவரும் வேன்களில் காலை 5.30க்கு வேளாங்கண்ணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டனர். அங்கு லாட்ஜ் கிடைக்காததால் போலீசார் ஏற்பாடு செய்துகொடுத்த தனியார் லாட்ஜில் அனைவரும் குளித்து விட்டு கோயிலுக்கு சென்று வழிபட்டனர். கோயிலில் அவர்களை சிறிது நேரம் மட்டுமே தரிசனம் செய்ய போலீசார் அனுமதித்தனர்.

பிரார்த்தனை முடித்து வந்த அவர்களை உடனடியாக திருச்சி விமானநிலையம் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதற்கிடையில் இலங்கை பக்தர்கள் வந்த தகவல் அறிந்து (புலி ஆதரவு கோமாளிகளிகள்) வேளாங்கண்ணியிலும் மதிமுக, நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர். தமிழகத்தை விட்டுசெல்லுமாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு 7 வேன்களில் வேளாங்கண்ணியிலிருந்து திருச்சி விமானநிலையத்திற்கு புறப்பட்டனர். இவர்களின் பாதுகாப்புக்காக நாகை டவுன் டிஎஸ்பி நீதிமோகன் தலைமையில் 20 போலீசார் 7 வேன்களின் முன், பின் என 3 போலீஸ் வாகனங்களில் வந்தனர். தொடர்ந்து திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் ஆகிய இடங்களில் மதிமுக, நாம்தமிழர் இயக்கம், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினர் வேன்களை வழிமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மேம்பாலம் பகுதியில் வாகனங்கள் மீது மதிமுகவினர் செருப்புகளை வீசினர்.பகல் 1.45 மணிக்கு வேன்கள் அனைத்தும் திருச்சி திருவெறும்பூர் மேம்பாலம் அருகே வந்தபோது, ஒரு வேனின் டயர் பஞ்சரானது.அந்த வேனில் இருந்தவர்களை இறக்கி, மற்ற வேன்களில் ஏற்றினர். மதியம் 2.10 மணிக்கு காட் டூர் பஜார் அருகே வந்தபோது, போலீஸ் பாதுகாப்பு வாகனம் வேகமாக முன்னால் சென்று விட்டது. அப்போது 7 வேன்களுக்கும் இடையே சற்று இடைவெளி ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பின்னால் காரில் வந்த ஒரு கும்பல், 3 வேன்கள் சென்றபின் நான்காவதாக வந்த வேனை வழிமறித்து நிறுத்தியது. காரிலி ருந்து இறங்கிய சுமார் 10 பேர் வேன்களை நோக்கி சராமரியாக கற்களை வீசினர். இதில் 2 வேன்களின் முன்புற கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. மற்றொரு வேனின் கண்ணாடி பாதி உடைந்தது. வேனில் இருந்த பெண்களும், சிறுவர், சிறுமியர்களும் உயிர் பயத்தில் செய்வதறியாது திகைத்தனர். சிலருக்கு கண்ணாடி கீறல்கள் ஏற்பட்டது.

இனியும் தாமதித்தால் பெரிய பிரச்னை ஏற்படும் என்பதால், பக்தர்கள் இருந்த உடைந்த வேனை அப்படியே எடுத்துக் கொண்டு திருச்சி ஏர்போர்ட் நோக்கி விரைந்தனர். தகவலறிந்த திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சத்தியப்பிரியா தலைமையிலான போலீ சார் உடனே அரியமங்கலம் சென்று, அங்கிருந்து மிகுந்த பாதுகாப்புடன் வேன்களை திருச்சி ஏர்போர்ட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் வேன்கள் அனைத்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர்போர்ட்டிற்குள் செல்லாமல் திடீரென விமானநிலைய போலீஸ் ஸ்டேசனுக் குள் அழைத்துச் சென்றனர். அங்கு மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் நடந்த சம்பவங்கள் பற்றி விசாரித்தார். அப்போது குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கதறி அழுதனர். பலர், தாங்கள் மிகவும் பசியோடு இருப்பதால் முதலில் சாப்பாடு, தண்ணீருக்கு ஏற்பாடு செய்து விட்டு விசாரிக்குமாறு கூறினர். இதையடுத்து அனைவரையும் ஏர்போர்ட் வளாகத்திலுள்ள பழைய டெர்மி னலுக்கு (சரக்கு முனையம்) அழைத்துச் சென்றனர். அங்கு சாப் பாடு, குடிநீர் அனைவருக் கும் வழங்கப்பட்டது. அதன்பின் விசாரணை நடத்தப்பட்டது. சிறப்பு விமானம் மூலம் அனை வரும் இரவு 10.40 மணிக்கு இலங்கை செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகளும், போலீசாரும் அவர்களிடம் கூறினர்.

இனி இந்தியா வரமாட்டோம்: இலங்கை புத்தாளம் மாவட்டம் சிலாபம் பகுதியை சேர்ந்த துலிக்கா (40) என்பவர் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக வேளாங்கண்ணிக்கு வந்து செல்கிறோம். இதற்கு முன் இப்படியொரு அநியாயத்தை பார்த்ததில்லை. 15ம் தேதி வரை இங்கு பல்வேறு கோயில்களுக்கு சென்று விட்டு இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் இங்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் அவசரம் அவசரமாக நேற்று காலை போலீசார் எங்களை வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அரைமணி நேரம் மட்டுமே சாமி கும்பிட அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து அழைத்து வந்து விட்டனர். வழி நெடுகிலும் எதிர்ப்பு தாக்குதல் நடந்தது. இனிமேல் இங்கு வரவே மாட்டோம் என்றார். வாழ்நாளில் மறக்க முடியாது: கொழும்புவைச் சேர்ந்த இளைஞர் உஷாந்த் (21) கூறுகையில், முதல் முறையாக இங்கு வந்துள்ளேன். ஆனால் இங்கு நடந்த சம்பவங்களால் கிடைத்துள்ள அனுபவத்தை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது. புறப்பட்டதில் இருந்த மனம் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டது. வழியில் என்ன நடக்குமோ என பயந்து கொண்டே இருந்தோம். அதன்படியே நடந்து விட்டது என்றார். சில நிமிட தாக்குதல்: இலங்கை பக்தர்கள் வந்த வேனை ஓட்டி வந்த திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த ஜெயக்குமார் கூறுகையில், திருச்சி காட்டூர் அருகே வந்தபோது ஒரு கார் நான் ஓட்டி வந்த வேனை ஓவர்டேக் செய்து நிறுத்தியது. விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வேனை நிறுத்தினேன்.

அப்போது அந்த கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் எனது கையில் லேசான காயம் ஏற்பட்டது. கண்ணாடி துகள்களும், கற்களும் வேன்களுக்குள் விழுந்தன. இதைக்கண்ட இலங்கை பக்தர்கள் அலறினர். அதற்குள் போலீசார் வந்து விட்டனர். சில நிமிடங்களில் இது நடந்து முடிந்து விட்டது என்றார். தமிழர்களா? சிங்களர்களா?: இலங்கை பக்தர்களை திருச்சி ஏர்போர்ட் அழைத்து வந்தபோது அனைவரும் போலீசார் முன் கதறி அழுதனர். அப்போது பலர் தமிழ் மொழியில் பேசியதை கண்டு போலீசார் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அனைவரும் தமிழர்களா என போலீசார் விசாரித்தபோது, கொழும்பு அருகேயுள்ள சிலாபம் தமிழர்கள், சிங்களர்கள் கலந்து வாழும் பகுதி என்பது தெரியவந் தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களர் எனவும், சிலர் தமிழர்கள் எனவும் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தெரிவித்தார். ஆனால் உளவுப்பிரிவு போலீசார் கூறுகையில், இவர்கள் அனை வரும் தமிழ்பேச தெரிந்த சிங்களர்கள் என குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment