Wednesday,September,05,2012இலங்கை::பராலிம்பிக் வரலாற்றில் இலங்கை சார்பில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பிரதீப் சஞ்சய தனதாக்கிக்கொண்டுள்ளார்.
இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.20க்கு நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் ஏழு பேர் கலந்துகொண்டனர்.
48.45 விநாடிகளில் போட்டித் தூரத்தைக் கடந்த ஒஸ்ரியாவின் கந்தர் மார்ட்டினேகர் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இரண்டாம் இடத்தை பிரேஸிலின் யொஹன்சன் நெசிமென்டோ பெற்றதுடன் மூன்றாம் இடத்தை இலங்கையின் பிரதீப் சஞ்சய தனதாக்கிக் கொண்டார்.
இவர் 49.28 விநாடிகளில் போட்டித் தூரத்தைக் கடந்துள்ளார்.
இந்தப் பிரிவில் சஞ்சய பதிவு செய்த சிறந்த காலப் பெறுதி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment