Wednesday,September,05,2012சென்னை::சென்னைக்கு யாத்திரைக்காக சென்று துன்புறுத்தலுக்கு இலக்கான 184இலங்கையர்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர்.
இவர்கள் திருச்சியில் இருந்து விசேட விமானம் மூலம் நேற்றிரவு 11.39 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ்நாட்டில் இலங்கையர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என இந்திய மத்திய அமைச்சர் வீ.நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து சென்னைக்குச் சென்ற கால்பந்தாட்ட அணியை வெளியேற்றி அதற்கு அனுமதியளித்த உத்தியோகத்தரை பணி இடைநிறுத்தம் செய்தமை வருந்தத்தக்க விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் எனவும் மத்திய அமைச்சர் வீ.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment