Tuesday, September 4, 2012

தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றும் (புலி)கூட்டமைப்பின் புலுடா அரசியல்!

Tuesday,September,04,2012
இலங்கை::மக்களுக்கு அரசியல் தலைமை வழங்குபவர்கள் தங்களை அந்த நிலைக்கு உயர்த்தி வைத்த மக்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கவேண்டும். விசேடமாக, சிறுபான்மை சமூகமொன்றுக்குத் தலைமை தாங்குபவர்கள் அந்தச் சமூகத்தின் விமோசனம் தொடர்பாக மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதிலேயே கண்ணுங்கருத்துமாக இருப்பது தான் உண்மையான தலைமைப் பண்பு.

வௌ;வேறு பெயர்களில் ஒரே அணியினரே அறுபத்தைந்து வருட காலமாக தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை வழங்கி வருகின்றார்கள். தமிழ் மக்களின் இன உரிமை தொடர்பான எதிர்பார்ப்புகளில் சிறிதளவாவது இந்த நீண்ட காலப் பகுதியில் நிறைவேறாதிருப்பதற்கு இந்தத் தலைமையே பெருமளவில் பொறுப்பேற்க வேண்டும். சுதந்திர இலங்கை இனப்பிரச்சினையுடனேயே தனது பயணத்தை ஆரம்பித்தது. முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரின் ஒரே கட்சியாகப் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைவதா என்ற கேள்வி எழுந்த போது இணைவதற்கு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் விதித்த நிபந்தனைகளுள் சம~;டி அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக அரசியலமைப்பு நிர்ணய சபையொன்றை நிறுவ வேண்டும் என்பதும் ஒன்று. அந்தக் காலத்திலேயே இனப்பிரச்சினை இருந்ததாலேயே இந்த நிபந்தனை முன்வைக்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம் இந்திய வம்சாவளியினரின் பிரசாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தது. இலங்கைத் தமிழருக்கு இனப்பிரச்சினை. இந்திய வம்சாவளியினருக்கு நாடற்றோர் என்ற பிரச்சினை. இரண்டு பிரச்சினைகளுக்கும் சம வயது எனலாம். இன்று இந்திய வம்சாவளியினருக்குப் பிரசாவுரிமையும் கிடைத்திருக்கின்றது, வாக்குரிமையும் கிடைத்திருக்கின்றது. இது அந்த மக்களின் தலைமை ஈட்டிய சாதனை. இலங்கைத் தமிழரின் பிரச்சினை தீரவில்லை. அது மோசமான பரிமாணத்தை அடைந்திருக்கின்றது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளும் அழிவுகளும் ஏராளம். இது இந்த மக்களின் தலைமை ஈட்டிய சாதனை!இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தான் பெற்றுக்கொடுக்கவில்லை. தமிழ் மக்களின் வாழ்வில் வளத்தையாவது ஏற்படுத்தினார்களாவென்றால் அதுவும் இல்லை. தமிழ் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை இத்தலைவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை. மக்களின் சமூக முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை. பிரதேச அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தவில்லை. ஆனால், தங்களை மாத்திரம் அபிவிருத்தி செய்து கொண்டார்கள். இன்றைய தலைவர்கள் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த காலத்தில் இருந்ததைவிடப் பல மடங்கு கூடுதலான வளத்தை இப்போது அடைந்திருக்கின்றார்கள்.

இன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தமிழ் மக்களின் விமோசனத்துக்கான செயற்பாடுகளை முன்னெடுக்காததை மன்னித்தாலும் தங்களில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்களை ஏமாற்றுவதை மன்னிக்க முடியாது. வடக்கு, கிழக்கு மாகணங்களின் இணைப்பைத் துரிதப்படுத்துவதற்காகத் தங்களுக்கு வாக்களிக்கும்படி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை பிரசாரம் செய்கின்றார்கள். இது தமிழ் மக்களுக்குச் சொல்வது. ஆங்கில ஊடகங்களுக்கு வேறு கதை.

ஏசியா ட்ரிபியூன் என்ற இணையத் தளத்துக்கு ஜூன் 29ஆம் திகதி சம்பந்தன் ஒரு பேட்டி அளித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பான அந்தப் பேட்டியில் “பிரதேச அரசாங்கம் என்று எதைக் கருதுகின்றீர்கள்” என்று கேட்கப்பட்ட கேள்விக்குச் சம்பந்தன் அளித்த பதிலைப் பாருங்கள்.

“இது ஒரு மாகாணமாக இருக்கலாம். இது மூன்று மாகாணங்களாகவும் இருக்கலாம். இது ஐந்து மாகாணங்களாகவும் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம்.”

பிரதேச அரசாங்கம் ஒரு மாகாணமாகவும் இருக்கலாம் என்றும் எதுவாகவும் இருக்கலாம் என்றும் ஆங்கில இணையத்துக்குக் கூறுகின்றார். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என்று தமிழ் மக்களுக்குக் கூறுகின்றார். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைந்த அலகையே பிராந்திய அரசாங்கமாக நாங்கள் ஏற்போம் என்று ஆங்கில இணையத்துக்கு ஏன் கூறவில்லை? இது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் அல்லாமல் வேறு என்ன?

இவர்களின் ஒற்றுமைக் கோ~மும் இது போன்றதே. தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிரசாரம் செய்கின்றார்கள். ஆனால், இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. தமிழரசுக் (புலி)கட்சியின் மேலாதிக்கத்துக்கு எதிராகக் (புலி)கூட்டமைப்பின் மற்றைய கட்சிகள் கொதித்தெழுகின்றன. தமிழரசுக் கட்சியின் முடிவைப் பகிரங்கமாக எதிர்க்கவிருந்தபோதிலும் ஆதரவாளர்களும் புலம்பெயர் சமூகமும் கேட்டுக்கொண்டதன் பேரில் அவ்வாறு செய்யவில்லை என்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்ததும் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுக்கவிருப்பதாகவும் ஏசியா ட்ரியூன் இணையத்துக்கு சுரே~; (புலி)பிரேமச்சந்திரன் கூறியது கூட்டமைப்புக்குள் ஒன்றுமையின்மை நிலவுவதையே காட்டுகின்றது.
வௌ;வேறு கட்சிகளுக்கிடையில் மாத்திரமன்றி ஒரே கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. தமிழரசுக் கட்சியின் தலைவருக்கும் செயலாளருக்குமிடையே முரண்பாடு. தலைவர் சிங்கக்கொடி ஏந்தியதற்குத் தமிழ் மக்களிடம் செயலாளர் மன்னிப்புக் கேட்டார். இவர் மன்னிப்புக் கேட்டதை அவர் கண்டித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று பெயர் வைத்துக்கொண்டபோதிலும் தங்களுக்குள் ஒற்றுமைப்பட முடியாத இவர்கள் தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

தலைவர்கள் தங்களுக்குள் ஒற்றுமைப்படாதிருப்பது அவர்களின் சொந்த விடயமென்றால் அதைப் பற்றி யாரும் அக்கறைகாட்ட வேண்டியதில்லை. ஆனால், இது தமிழ் மக்களின் எதிர்காலத்தை நேரடியாகப் பாதிக்கின்றது. கூட்டமைப்புக்குள் ஒன்றுபட்ட கருத்துநிலை இல்லாததாலேயே இனப்பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கையொன்றை வகுத்து முன்வைக்க முடியவில்லை. கட்சிக்குள் நிலவும் முரண்பாட்டைப் பொருட்படுத்தாமல் பெரும்பான்மை முடிவோடு தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தால் கூட்டமைப்பு உடைந்துவிடும் என்ற அச்சம். அதனால், உலகில் எந்த விடுதலை இயக்கமும் செய்யாததைச் செய்கின்றார்கள். இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்கின்றார்கள். அரசாங்கம் எந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தினாலும் ஏற்பார்களா?

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வை நாடுகின்றோம் என கூறுவது தீர்வுத் திட்டமல்ல. ஐக்கிய இலங்கையில் மாவட்ட சபை, மாகாண சபை, பிராந்திய சபை, சம~;டி எனப் பல தீர்வு வடிவங்கள் உள்ளன. அரசாங்கம் இவற்றுள் எதை நடைமுறைப்படுத்தினாலும் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளுமா? தீர்வுத்திட்டமொன்றைத் தயாரித்து இதுதான் நாங்கள் கூறும் தீர்வு எனப் பிரகடனப்படுத்தி அந்த அடிப்படையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்துக்கு வரலாம். அதைவிட்டு, அரசாங்கம் தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்துக்கு ‘திறந்த காசோலை’ வழங்குவது தீர்வுக்கான பொறுப்பை அரசாங்கத்துக்குக் கையளிப்பதாகிவிடும். முன்னைய தலைமைகளான தமிழரசுக் (புலி)கட்சியும், தமிழர் விடுதலைக் (புலி)கூட்டணியும் எந்தக் கொள்கையும் இல்லாமல் தமிழ் மக்களை வழிநடத்த வரவில்லை.

கொள்கையொன்றை முன்வைப்பதற்கு இயலாத நிலையில், சர்வதேசம் தீர்வைப் பெற்றுத் தரும் எனக் கூறித் தப்பிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இது அழும் குழந்தைக்குச் சந்திரனைக் காட்டி உணவூட்டுவது போன்ற ஏமாற்று வித்தை. சர்வதேசம் பெற்றுத் தரப்போவது எந்தத் தீர்வை என்று கூட்டமைப்புத் தலைவர்களால் சொல்ல முடியுமா? தாங்களே சர்வதேச சமூகத்தைச் செயற்பட வைப்பதாகப் பெருமை பேசுபவர்கள் எந்தத் தீர்வைச் சர்வதேச சமூகம் பெற்றுத் தரும் என்பதையும் சொல்ல வேண்டும்.

தங்கள் இயலாமையை மூடி மறைப்பதற்கே கூட்டமைப்பு சர்வதேச சமூகத்தைத் துணைக்கு அழைக்கின்றது. தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் புலுடா அரசியலைப் புரிந்து கொள்வதற்குத் தமிழ் மக்களுக்கு இன்னும் எவ்வளவு காலம் தேவையோ! கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் என்னென்ன சொல்கின்றார்களோ அவற்றையெல்லாம் வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரத்திலும் சொல்வார்கள். பின்னர் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவற்றையே சொல்வார்கள்.

- சங்கர சிவன்,

No comments:

Post a Comment