Monday, September 24, 2012
இலங்கை::கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமானம் செய்யும் வைபவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவான இரண்டு உறுப்பினர்கள் பகிஷ்கரித்ததாக தெரிய வருகின்றது.
இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் சபாநாயகர், பிரதி சபாநாயகர் சத்தியப்பிரமானம் செய்யும் வைபவம் நடைபெற்றது.
இதில் கட்சி தலைவர்கள், முக்கியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து தெரிவான அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஜமீல் மற்றும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த அன்வர் ஆகிய இருவரும் இந்த வைபவத்தை புறக்கனித்ததாக தெரிய வருகின்றது.

No comments:
Post a Comment