Monday, September 24, 2012
இலங்கை::67 வது ஐக்கிய நாடுகள் பொது சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜனாதிபதிக்கு பதிலாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் செல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் ,ந்தியாவிற்கு சென்றிருந்த அமைச்சர் நேற்று அமெரிக்கா நோக்கி பயணமானார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் பந்துல ஜயசேகர ,ந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் ,இன்று ஐக்கிய நாடுகளின் உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் பங்கெடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொது அமர்வில் கலந்து கொள்ளாமல் ,இருப்பது முதல் தடவையல்ல எனவும், ஏற்கனவே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தம் சார்பாக பிரதிநிதியொருவரை அனுப்பியிருந்தமை தொடர்பாகவும், ஜயசேகர நினைவு கூர்ந்தார்.

No comments:
Post a Comment