Monday, September 24, 2012

சென்னை ஏர்போர்ட்டில் ஊழியர்கள் உண்ணாவிரதம்!

Monday, September 24, 2012
மீனம்பாக்கம்: சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு விமான நிலைய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளனர்.கடந்த சில நாட்களாக தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று முதல் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை விமான நிலைய ஊழியர் சங்கம் தொடங்கியுள்ளது. இன்று காலை 9 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலைய வளாகத்தின் கார் பார்க்கிங் பகுதியில் தொழிற்சங்க தலைவர் ஜார்ஜ் தலைமையில் நிர்வாகிகள் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.

இது பற்றி ஜார்ஜ் கூறுகையில், சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் லாபத்தில் இயங்கி வருகிறது. அதை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். தற்போது விமான கட்டுப்பாட்டு பிரிவு, விமான நிலைய ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதை தனியாக பிரித்து கார்பரேஷன் போன்று மாற்ற முடிவு செய்துள்ளது. இதையும் கண்டிக்கிறோம். மேலும், எங்களுக்கு முறையான பதவி உயர்வு, ஓய்வூதி யம் வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment