Monday, September 24, 2012

நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகையுமான மாலினி பொன்சேகா:இராஜினாமாவை வாபஸ் பெற்றார்!

Monday, September 24, 2012
இலங்கை::ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகையுமான மாலினி பொன்சேகா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக எடுத்த முடிவை மாற்றிக்கொள்வதாகவும் தான் கையளித்த இராஜினாமா கடிதத்தை மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரமே தான் இந்த முடிவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொருவருக்கு வாய்ப்பளிப்பதற்காகவே தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவிருந்ததாக  மாலினி பொன்சேகா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment