Wednesday,September,05,2012சென்னை::புத்தர் விழாவில் பங்கேற்க மத்திய பிரதேசத்திற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் வருகையை ரத்து செய்ய வேண்டும் என அம்மாநில முதல்வருக்கு (புலி ஆதரவு கோமாளி)வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் மிருகத்தனமான ராணுவத் தாக்குதலால், லட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்பொழுது எங்கள் தலையில், மேலும் ஒரு இடி விழுந்துள்ளது. புத்த மதம் குறித்த கல்வி ஆய்வுக்கான மையத்தை, மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நிறுவுவதற்காக, செப்.21ம் தேதி நடைபெறுகின்ற அடிக்கல் நாட்டு விழாவில் ராஜபக்சே பங்கேற்பார் என சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். சுஷ்மா சுவராஜ் கொடுத்த அழைப்பை ரத்து செய்து, ராஜபக்சே வருகையைத் தடுத்து, புத்த மத புனிதத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். சாஞ்சிக்கு வரும் ராஜபக்சேயை எதிர்த்து, 21ம் தேதி மதிமுக சார்பில் நடக்கும் கருப்புக்கொடி அறப்போராட்டத்திற்கு (புலி ஆதரவு கோமாளி)நான் தலைமை தாங்குவேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment