Wednesday, September 5, 2012

கூரிய ஆயுதத்தால் தாக்கி பிள்ளைகள் இருவர் கொலை!

Wednesday,September,05,2012
இலங்கை::கொடகவெல, பல்லெபெத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இனந்தெரியாத ஒருவர் நேற்றிரவு கத்தியால் குத்தியதில் குறித்த இரண்டு பிள்ளைகளின் தாயார் அம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பனாமுரே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment