Wednesday,September,05,2012இலங்கை::வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தில் 50 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளங்காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment