Wednesday,September,05,2012புதுடெல்லி::இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சிகளை நிறுத்தப் போவதில்லை என இந்திய மத்திய அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.
தமிழக அரசியல்வாதிகள் அழுத்தங்களை பிரயோகித்த போதிலும் இலங்கைப் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையாக உடனடியாக நிறுத்தும் திட்டமில்லை என தெரிவித்துள்ளது.
எனினும், இரு நாட்டு படைவீரர்களும் கூட்டாக இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட உள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பெங்களுர், கன்னுர் மற்றும் பெல்கம் ஆகிய பகுதிகளில் இலங்கையைச் சேர்ந்த 450 படைவீரர்கள் பயிற்சி பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கைகள் தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல்வாதிகளும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment