Wednesday, September 5, 2012

இலங்கை வரும் இந்தியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டால் என்னவாகும்? - அமைச்சர் விமல் வீரவன்ஸ சீற்றம்!

Wednesday,September,05,2012
இலங்கை::இலங்கைக்கு எதிராக தமிழ்நாடு செயற்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும், இலங்கைக்கு வழமையாக வருகின்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மீது இங்குள்ளவர்கள் தாக்குதல் மேற்கொண்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் உணரவேண்டும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முட்டாள்தனமாக செற்படுவதால் இலங்கை - இந்திய உறவில் பாரிய விரிசல் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் இவ்விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசு கூடிய கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ கேட்டுக்கொண்டார்.

'இலங்கை - இந்திய உறவில் இவ்விவகாரங்கள் பாரிய விரிசலை ஏற்படுத்தி விடயம் கையை மீறிச் செல்வதற்கு முன்பாக இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment