Wednesday, September 5, 2012

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் – பிரதி தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு!

Wednesday,September,05,2012
இலங்கை::எதிர்வரும் எட்டாந்திகதி நடைபெறவுள்ளகிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்காக இடம்பெற்றுவந்த தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என்றும், இன்று நள்ளிரவுக்கு பின்னர், பிரச்சார பணிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக, சட்டத்தினை தீவிரமாக அமுல்ப்படுத்துமாறு, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பிரதி தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்னாயக தெரிவித்துள்ளார்.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு 3,247 வாக்குச் சாவடிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், வாக்களிப்பதற்காக 3 லட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் தகைமை பெற்றுள்ளமுடன் மாகாண சபை தேர்தலுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேர்தலின்போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள், கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டுமென, தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment