Thursday, September 27, 2012
சென்னை::"விசா' பெறுவதற்கு புதிய நடைமுறை, அமெரிக்க துணை தூதரகத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
அமெரிக்கா செல்ல "விசா' பெறுவதற்கு, சென்னை அண்ணாசாலையில் உள்ள துணை தூதரக அலுவலகத்தில் ஒரே நாளில் கைரேகை பதிவும், நேர்காணலும் நடந்து வந்தது. நேற்று முதல் புதிய முறை அமலுக்கு வந்துள்ளது. "விசா'வுக்கு விண்ணப்பிப்போர் ஆவணங்களை சமர்பித்து, கைரேகையை பதிவு செய்ய வசதியாக, தேனாம்பேட்டை செனடாப் சாலையில், தனியாக ஒரு மையம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்தவர்கள், விரும்பிய மற்றொரு நாளில், நேர்காணலில் பங்கேற்கும் வகையில், துணை தூதரகத்தில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment