Thursday, September 27, 2012
இலங்கை::கையடக்க தொலைபேசி சிம் அட்டைகளை பயன்படுத்தி இடம்பெறுகின்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை காவற்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் அஜித் ரோஹன வெளியிட்டுள்ளார்.
கையடக்க தொலைபேசிகளை கொண்டு மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறிதொருவரின் சிம் அட்டைகளை பயன்படுத்தி குற்றச் செயல்கள் நடத்தப்படுவதாக தெரிவித்த காவற்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் அஜித் ரோஹன தத்தமது சிம் அட்டைகளை பிறிதொரு நபர்களுக்கு வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment