Sunday, September 23, 2012

இந்தியா செல்லும் இலங்கை யாத்திரிகர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - என்.கே.டி.எஸ்.குணவர்தன!

Sunday, September 23, 2012
இலங்கை::இந்தியாவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்கள் எவ்வித அச்சமும் இன்றி செல்ல முடியுமெனவும் புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய அரசுடன் ஒன்றிணைந்து இந்த விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பதில் அமைச்சர் என்.கே.டி.எஸ்.குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளமை குறித்து வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment