Sunday, September 23, 2012
சென்னை: :இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய பயணத்தை கண்டித்து, கடந்த 21ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதகரத்தை முற்றுகையிட போவதாக விடுதலை சிறுத்தைகள் அறிவித்தனர். நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அலுவலகத்துக்கு சென்றவர்களும், மருத்துவமனைக்கு சென்றவர்களும் உச்சி வெயிலில் பாதிக்கப்பட்டனர்.
மறியலை கண்டித்து சில வாகன ஓட்டிகள் விடுதலை சிறுத்தை கட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. கை கலப்பு ஏற்பட்டது. இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தனி செயலாளர் இளஞ் சேகுவாரா (45) ஆத்திரம் அடைந்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்ஜிஆர் நகரை சேர்ந்த கார்ப்பென்டர் சுந்தர் என்பவரை சரமாரியாக தாக்கினார். இதனால், பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, வழக்கு பதிவு செய்த போலீசார் இளஞ் சேகுவாராவை இன்று அதிகாலை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

No comments:
Post a Comment