Monday, September 3, 2012

இலங்கையில் அமைதியை உறுதிசெய்வதும் மேற்கொண்டு தவறுகள் நடக்காமல் இருக்க உத்தரவாதமளிப்பதுமே அமெரிக்காவின் நோக்கம் - ஜெனிபர் ஏ மக் இன்ரைர்!

Monday, September 03, 2012
சென்னை::இலங்கையில் அமைதியை உறுதி செய்வதும், அங்கு மேற்கொண்டு எத்தகைய தவறுகளும் நடக்காமல் இருக்க உத்தரவாதமளிப்பதுமே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என சென்னையில் உள்ள அமெரிக்காவின் துணைத்தூதுவர் ஜெனிபர் ஏ மக் இன்ரைர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜெனிபர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை அரசு முக்கிய பிரச்சினைகளில் முன்னோக்கி செல்லும் நிலையில், அனைத்துலக சமூகத்தின் ஏனைய கூட்டாளிகளுடன் இணைந்து அந்நாட்டிற்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயாராகவே உள்ளது. எனத் தெரிவித்த அவர்,

குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், புனர்நிர்மாணத்தை ஊக்குவிக்கவும், அரச தனியார் கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.கூறியுள்ளார்.

சிறிலங்காவில் இனிமேல் எத்தகைய தவறுகளும் நடக்காமல் இருப்பதையும், அங்கு அமைதியை உறுதி செய்வதே தற்போது சிறிலங்கா தொடர்பில், அமெரிக்காவின் முக்கிய அவதானமாகவுள்ளதாக அவர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment