Tuesday,September,04,2012புதுடெல்லி::டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் டி.ஆர். பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் மனுக்கள் அளித்தனர்.
அதில், சிங்கள ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டிலோ, இந்தியாவில் வேறு எந்த பகுதியிலோ பயிற்சி அளிக்கக்கூடாது. பயிற்சி பெறும் இராணுவ வீரர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து, திமுக எம்.பி. சிவா, சிங்கள ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. இதுகுறித்து டெசோ மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் கொடுத்தோம். அவர், பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் விவாதித்து உறுதியான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக கூறினார்.
இதுபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரும் இலங்கை ராணுவத்தினரை திருப்பி அனுப்புவதில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ.கே.அந்தோணி உறுதி அளித்ததாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment