Tuesday,September,04,2012திருச்சி::வேளாங்கண்ணியில் நடந்த தேவாலயப் பெருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து வந்த பக்தர்களுக்கு பல்வேறு தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்து. அவர்கள் சுமார் 10 பேருந்துகளில் போலிஸ் பாதுகாப்போடு திருச்சி கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை இலங்கையில் இருந்து 134 பக்தர்கள் திருச்சி வந்தனர். தமிழகத்தில் உள்ள எதிர்ப்புகளை சுட்டிக்காட்டி, அவர்களை திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியேற விடாமல் போலீசார் தங்க வைத்தனர். வேளாங்கண்ணியில் இருந்து வரும் இலங்கை பக்தர்களுடன் இவர்களையும் சேர்த்து இலங்கை விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
ஐந்து பஸ்களில் திருச்சி விமானநிலையத்தினை நோக்கிப் பயணித்த இலங்கை யாத்திரிகர்கள் 184பேரும் எவ்வித இடையூறுமின்றி திருச்சி விமானநிலையத்தினை அடைந்துள்ளதாக திருச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment