Tuesday,September,04,2012சென்னை::சென்னை மகாபோதி சங்கத்தின் தலைமையகம் உள்ளிட்ட இலங்கை அலுவலகங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயிர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரும் இராணுவத்தினரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியிலுள்ள ஆலயமொன்றினை அண்மித்த கட்டடத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை இன்று மாலை விசேட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பியனுப்ப திட்டமிட்டுள்ளதாக பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
அந்தக் குழுவினரின் நலன்கள் தொடர்பில் கண்டறிவதற்கு உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டு அதிகாரிகள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
184 இலங்கையர்கள் தமிழ்நாட்டிலுள்ள சில அமைப்புகளின் அச்சுறுத்தல் காரணமாக தற்போது பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கம், ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து விசேட விமானத்தின் மூலம் இலங்கையர்களை திருப்பி அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, மறு அறிவித்தல் வரை தமிழகத்திற்கான பயணங்களை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுமாறு பதில் வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment