Tuesday,September,04,2012இலங்கை::அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நீலப்படையை பயன்படுத்தி அரசாங்கம் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் (புலி)சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற பிரதேசங்களில் இந்த நீலப்படையினர் சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்குமாறு கிழக்கு மாகாண சமுர்த்தி உத்தியோகத்தர்களை அரசாங்கம் வற்புறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீலப்படை தொடர்பில் கடந்த 2ம் திகதியே தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் மூன்று மாகாணங்களிலிருந்தும் இதுவரையில் 352 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment