Thursday, September 27, 2012
இலங்கை::கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்து இந்தியாவுடன் பேசப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. விரைவில் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவோன்று இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அணு உலையின் பாதுகாப்பு தொடர்பில் இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அணு மின் நிலையம் உச்ச அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணு மின் நிலையத்தினால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படப் போவதில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment