Thursday, September 27, 2012

500 புலி உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது!

Thursday, September 27, 2012
இலங்கை::500  புலி உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த 12000  புலி உறுப்பினர்களில் 11500 பேர் ஏற்கனவே புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 500  புலி உறுப்பினர்களில் 320 பேர் விரைவில் சமூகத்துடன் மீள இணைக்கப்படுவர் என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட கால தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொண்ட 320 பேரே விரைவில்விடுதலை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment