Thursday, September 27, 2012

எய்ட்ஸ் விழிப்புணர்வு: .ஐ.நா நல்லெண்ண தூதராக ஐஸ்வர்யா ராய் நியமனம்!!

Thursday, September 27, 2012
நியூயோர்க்::எய்ட்ஸ்,ஹெச்ஐவி வைரஸ் பரவுவதை தடுக்க ஐ.நா சபையால் ஏற்படுத்தப்பட்ட ஐ.நா எய்ட்ஸ் அமைப்புக்கு சர்வதேச நல்லெண்ணத் தூதராக நடிகை ஐஸ்வர்யா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 67வது பொது கூட்டத்தில் ஐ.நா எய்ட்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் மைக்கேல் சிடிபி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். குழந்தைகளுக்கு ஹெச்ஐவி தாக்குவதை தடுத்தல், நோய் ஏற்பட்டவர்களுக்கான மருத்துவமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்தான் ஐஸ்வர்யா ராயின் பணியாக இருக்கும்.

இதுகுறித்து ஐஸ்வர்யாராய் கூறுகையில், Ôஇந்த மதிப்புமிக்க பணியை ஏற்பதில் பெருமைப்படுகிறேன். பெண்கள், குழந்தைகள் நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நான் எப்போதுமே முன்னுரிமை கொடுப்பேன்’’ என்றார். ஐஸ்வர்யா ராயின் மாமனாரான அமிதாப் பச்சன் யூனிசெப் அமைப்பின் சர்வதேச நல்லெண்ண தூதராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment