Thursday, September 27, 2012
இலங்கை::உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்களை இல்லாதொழிக்க இலங்கை அரசாங்கத்தை வலிறுத்துமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரத் திட்டமிட்டுள்ளதாக (புலி)கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தியப் பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புப் பிரதிநிதிகள், இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர். எவ்வாறான விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்பது தொடர்பில் நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment