Tuesday, September 25, 2012
மண்டபம்::ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகில் சீனியப்பாதர்காவை சேர்ந்த மீனவர் தங்கராஜ், 52. இவர் 2004ல் மற்றொரு மீனவருடன் நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றார். நடுக்கடலில், இலங்கை கடற்படையினர், தங்கராஜை போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்து, மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கொழும்பு வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன் தினம், தங்கராஜ் சிறையில் மாரடைப்பால் இறந்தார். இந்திய தூதரகம் மூலம் தமிழக அதிகாரிகளுக்கு மீனவர் இறந்த தகவல் வந்துள்ளது. இவருக்கு, மனைவி செல்வி, நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

No comments:
Post a Comment