Tuesday, September 25, 2012

கொழும்பில் இருந்து தங்கம் கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் சிக்கினர்!

Tuesday, September 25, 2012
சென்னை::கொழும்பில் இருந்து தங்கம் கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் சிக்கினர். இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து நேற்று  இரவு 8.30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் இலங்கை கண்டி பகுதியை சேர்ந்த காஜா மொய்தீன் (57), அவரது மனைவி சம்சூன் பீவி (52) ஆகியோர் சுற்றுலாவிசாவில் வந்திருந்தனர். கோட் அணிந்திருந்த அவர்கள் மீது விமான நிலைய சுங்க அதிகாரிக ளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சோதனையில் இருவரும் கோட்டுக்குள் தங்கத் தகடுகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 900 கிராம் தங்கத்தகடுகள் இருந்தன.

அதே விமானத்தில் இலங்கை கண்டி பகுதியை சேர்ந்த மேப்பிலா பாத்திமா (32) என்ற பெண் சுற்றுலா விசாவில் வந்திருந்தார். அவர் முழுக்கை சுடிதார் அணிந்திருந்தார். அவரையும் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதித்தனர். அப்போது, முழங்கையின் மேலே தங்க பிஸ்கட்டை கம்பி போன்று அவர் கையில் சுற்றி, ஸ்கேனரில் தெரியாமல் இருக்க கருப்பு பெயின்ட் பூசியிருந்தார்.

அவரிடம் இருந்தும் தங்க பிஸ்கட் கம்பியை அதிகாரிகள் மீட்டனர். 3 பேரிடம் இருந்தும் ஒரு கிலோ 120 கிராம் தங்கத் தகடுகள் மற்றும் தங்கக்கம்பிகள் கைப்பற்றப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.38 லட்சத்து 79,000. இவர்களிடம் இலங்கையில் இருந்து தங்க கம்பிகளை கொடுத்து அனுப்பியது யார்? சென்னையில் யாரிடம் தருவதற்காக தங்கத்தை கடத்தி வந்தனர் என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

இந்த ஆண்டு துவக்கம் முதல் இதுவரை இலங்கையில் இருந்து தொடர்ச்சி யாக தங்க பிஸ்கட்கள், தகடுகள், கம்பிகள் ஆடை, சூட்கேஸிற்குள் மறைத்து கொன்டுவந்த 38 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 35 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தொடர்ச்சியாக பெருமளவு தங்கம் கடத்திவரப்படுவதன் பின்னணி என்ன என்பது பற்றியும் சுங்க அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment