Tuesday, September 25, 2012

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் முதமைச்சர் பதவி வழங்கப்படும் இறுதிச் சந்தர்ப்பம் இது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

Tuesday, September 25, 2012
இலங்கை::அதிக விருப்பு வாக்குகளை அடிப்படையாக வைத்து, முதமைச்சர் பதவி வழங்கப்படும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

உள்ளூராட்சி மன்றங்களினதும், மாகாண சபைகளிலும் விருப்பு வாக்குகளை அடிப்படையாகக் கொள்ளாது, தொகுதிவாரியான தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளதால் எதிர்காலத்தில் சிக்கலானதொரு நிலைமை ஏற்படாதென ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.


ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் முற்பகல் நடைபெற்ற கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்வதற்கான நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மக்களிடையே ஏற்பட்டுள்ள பேதங்களை இல்லாமற் செய்வதற்கு முதலமைச்சர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி இதன்போது கூறினார்.


மாகாண சபைகளின் ஊடாக சிறந்த மக்கள் சேவையை பெற்றுக்கொள்ளுதல் அனைவரினதும் பொறுப்பென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தமது மாகாணங்களை அபிவிருத்தி செய்தல் மாகாண சபையின் அனைத்து பிரதிநிதிகளினதும் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய சர்வதேச ரீதியில் நாட்டிற்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கும் வகையில் செயற்படத்தயாராகுமாறு நேற்றைய தினம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment